சாட்டில் நிலைகொண்டிருந்த பிரான்ஸ் துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் விழா சாட்டின் தலைநகரான என்’ஜமேனாவில் உள்ள அட்ஜி கோசே இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி கடந்த வாரம் அறிவித்தபடி, சாட்டில் பிரான்ஸின் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வந்தது, நாட்டில் 120 ஆண்டுகளுக்கும் மேலான பிரான்ஸ் இராணுவ ஈடுபாட்டின் முடிவையும், ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியையும் குறிக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றாலும், சில மேற்கத்திய நாடுகள் நிதி, சட்டம் ,இராணுவ வழிமுறைகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில், குறிப்பாக நிதி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து தலையிடுகின்றன. இந்த “புதிய காலனித்துவம்” ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
Trending
- தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
- பாரதீய ஜனதா கூட்டணியால் அமைதிகாக்கும் ஜெயக்குமார்
- பாபா முத்திரையுடன் ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
- கணித ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண மாணவர்கள்
- பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி
- சிட்னி முருகன் ஆலயத்தில் புத்தாண்டு வழிபாடு
- அல்-அஹ்லி மருத்துவமனை செயல்பாடுகள் நிறுத்தம்