சருமத்தை வெண்மையாக்கும் கிறிம்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விசேட மருத்துவர் தீப்தி பெர்னாண்டோ கூறுகிறார்.
தேசிய விஷத் தடுப்பு வாரத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தோல் மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் பாதுகாப்பை வழங்குகிறது.
மெலனின் நிறமி இந்த பாதுகாப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.சருமத்தின் நிறத்தைத் தீர்மானிக்கிறது , புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது என்பதை வலியுறுத்தினார்.
இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளில், மெலனின், ஆரோக்கியப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, இதில் தோல் வயதாவதை மெதுவாக்குவதும் அடங்கும் என்று மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பல சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் ஸ்டெராய்டுகள், ஹைட்ரோகுவினோன் மற்றும் கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன.
இன்றைய இலங்கை சந்தையில், பாதரசம் மற்றும் ஸ்டெராய்டுகள் பொதுவாக இந்த தயாரிப்புகளில் காணப்படுகின்றன. குறிப்பாக, பாதரசம் மெலனின் உற்பத்தியை சீர்குலைக்கிறது என்று கூறினார்.