துபாயில் நடைபெற்ற சம்பியன் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 264 ஓட்டங்கள் எடுத்தது. 48.1 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்த இந்தியா 267 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அபாரமாக விளையாடி 73 ஓட்டங்கள் அலெக்ஸ் கேர்ரி 61 ஓட்டங்கள் அடித்தார்
முகமது ஷமி மூன்று விக்கெட்ற்களையும், வருண் சக்கரவர்த்தி , ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்டுகளையும் வீழ்த்தினர்.
265ஓட்டங்கள் கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். விராட் கோலி அபாரமாக விளையாடி 85 ஓட்டங்கள் அடித்தார். ராகுல் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார்.அவர் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் , ஒருநாள் உலகக் கோப்பை ,ரி20 உலகக் கோப்பை 2024, சம்பியன்ஸ் டிராபி 2025 ஆகிய நான்கு இறுதிப் போட்டிகளில் அணிய வழிநடத்திய கப்டன் என்ற பெருமை பெற்றார் ரோஹித்