சம்பியன்ஸ் டிராபிக்கான பரிசுத் தொகையை பெருமளவில் உயர்த்துவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 2017 ஆம் ஆண்டின் தொகையை விட 50% அதிகமாகும்.
2025 சம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் டொலரும் , இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டொலரும் வழங்கப்படும்.அரையிறுதிப் போட்டியாளர்கள் தலா $560,000 பெற உள்ளனர். போட்டியில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா $350,000 வழங்கப்படும். ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா $140,000 கிடைக்கும்.
ஒவ்வொரு குழு நிலை வெற்றிக்கும் ஒவ்வொரு அணிக்கும் $34,000 வழங்கப்படும். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் $125,000 உத்தரவாதமான தொகை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.