அதிகாரப்பூர்வ போட்டியை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தபோதிலும், பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைப் பிரதிநிதிகள் இல்லாதது போட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர், தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
கிறிக்கெற் சபையின் எந்த உறுப்பினரும் மேடையில் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி நிறைவு விழாவில் கலந்து கொள்ளவில்லை.அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் சம்பியன்ஸ் டிராபி போட்டி இயக்குனர் சுமைர் அகமது கலந்து கொண்டார்.கடுமையான ஐசிசி நெறிமுறைகள் தேர்ந்தெடுக்கப்படாத கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் மேடையில் பங்கேற்க தடை விதித்துள்ளது.
இதுவே சுமைர் அகமது பரிசளிப்பு மேடைக்கு வராததால் காரணம் என கூறப்படுகிறது. மேலும், துபாய் மைதானத்தில் போட்டியை நிர்வகித்த ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கும் இதே விதி பொருந்தும் என்பதால் அவரும் பரிசளிப்பு மேடையில் காணப்படவில்லை.