ஹோமகமவில் போலி துப்பாக்கி , போதைப்பொருள் என்பனவற்றுடன் மாதவ பிரசாத் என்ற ராப் பாடகர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறு ஆண்கள் துப்பாக்கியை அருகில் வைத்திருந்து போதைப்பொருள் உட்கொள்வதைக் காட்டும் வீடியோ பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஹோமாகமவில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் 26 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணையின் போது சந்தேக நபர் தனது இரசிகர்களை அதிகரிக்க இந்த வீடியோ ஒன்லைனில் வெளியிடப்பட்டதாக ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொலிஸார் அவரிடம் இருந்து 20 மில்லிகிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), 35 கிராம் ஹாஷிஷ் என்பனவற்றைக் கைப்பற்றினர்.