Friday, January 9, 2026 10:26 pm
வெனிசுலா விவகாரத்தில் அதிரடி காட்டிய அமெரிக்கா, அடுத்ததாக கிரீன்லாந்து தீவை கைப்பற்றும் நோக்கில் காய்களை நகர்த்தி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காக அந்தத் தீவை சொந்தமாக்கி கொள்வது உறுதி என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதற்காக டென்மார்க் அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், டென்மார்க் தனது தீவை விற்க திட்டவட்டமாக மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வருவது மிகவும் அவசியம் என்று ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. டென்மார்க் விற்க முன்வராவிட்டாலும், வலுக்கட்டாயமாக அந்த தீவை பறித்து கொள்வோம் என்ற தொனியில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், டென்மார்க், ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

