Sunday, January 25, 2026 4:17 pm
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோரின் ஆண்டு வருமானத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவர்கள் இருவரும் தலா ஒரு வகை கிறிக்கெற் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால், இவர்களை உயர்மட்ட ஒப்பந்த பிரிவில் வைப்பது தகுதியற்றது என கருதப்படுகிறது.
இதன் விளைவாக, தற்போதுள்ள ரூ. 7 கோடி மதிப்பிலான ‘A+’ ஒப்பந்த பிரிவை முழுவதுமாக நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, ‘A+’ பிரிவில் நீடிக்க ஒரு வீரர் மூன்று வகை கிறிக்கெற் போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஆனால் கோலியும் ரோஹித்தும் தற்போது ஒரு பார்மெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதால், அவர்கள் நேரடியாக ‘B’ பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. ‘B’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா, “இது ஒரு கிறிக்கெற் ரீதியான முடிவு மட்டுமே, இதில் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். இளம் வீரர்களை அனைத்து வகை கிறிக்கெற்றிலும் விளையாட ஊக்குவிப்பதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்று கூறினார்.

