பகிஸ்தானுகு எதிராக துபாயில் நடைபெற்ற சம்பியன் லீக் தொடரில் கோலி சதம் அடிக்க இந்தியா 6 விக்கெற்களால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெறி பெற்றபாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.
பாபர் அசாம் 5 பவுண்டரிகளை அடித்து அதிரடிகாட்டினார். 26 பந்துகளில் 23 ஓடங்கள் எடுத்த பாபர் அசாமை ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றினார்.
3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த செளத் ஷகில் – முகமது ரிஸ்வான் ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்கும் நோக்கில் நிதானமாக ஆடியது. இந்திய சுழலுக்கு கட்டுப்பட்டு அவர்கள் அதிரடி காட்ட முடியாது திணறினர். 9.2 ஓவர்களில் 42 ஓட்டங்களை மட்டுமே ட்டித்த இந்த ஜோடி 26வது ஓவரில்தான் 100 ஓட்டங்களை எட்டிப்பிடித்தது. 100 ஓட்டங்களை கடந்த பிறகு அதிரடியாக ஆட இந்த ஜோடி முயற்சித்தது. கேப்டன் ரிஸ்வான் நிதானமாக ஆடி வந்த நிலையில் அதிரடிக்கு மாற முயற்சித்தார். மறுமுனையில் செளத் ஷகில் அரைசதத்தை கடந்தார்.
ரிஸ்வான் கொடுத்ட கட்ச்சை ஹர்ஷித் ராணா தவறவிட்டார். அடுத்த ஓவரிலே அவர் அக்ஷர் படேல் சுழலில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பை பறிகொடுத்தார். 77 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 46 ஓட்டங்கள் அடித்து ரிஸ்வான் ஆட்டமிழந்தார். சில நிமிடங்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் 76 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 62 ஓட்டங்கள் அடித்த செளத் ஷகில் வெளியேறினார்.
43வது ஓவரில் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்கள் அடித்தது. குஷ்தில் ஷாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த நசீம் ஷா 14 ஓட்டங்களில் அவுட்டானார். கடைசி நேரத்தில் குஷ்தில்ஷா அதிரடியில் இறங்கினார். 39 பந்துகளில் 2 சிக்ஸருடன் 38 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் அணி 241 ஓட்டங்கள் எடுத்தது.
242 எனும் இலக்குடன் இந்திய களம் இறங்கியது. கப்டன் ரோகித் ஷர்மா20 ஓட்டங்களில் அட்டமிழக்க , கில்லுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 100ஓட்டங்களை எட்டிய போது, கில், 46 ஓட்டங்களுடன் வெளியேறினார். கோலியுடன் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். கோலி 62 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், கோலி பவுண்டரி அடித்து சதம் அடித்தார். , 42.3 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்ததால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
Previous Articleஜேர்மன் தேர்தல் கருத்துக் கணிப்பில் இரண்டு கட்சிகள் முன்னிலை
Next Article நியூஸிலாந்தில் புதிய இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
Related Posts
Add A Comment
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
© 2025 Eekan Media . Designed by Akkenum Interactive.