Tuesday, January 27, 2026 9:11 pm
·
ஈழத்து மெல்லிசை, பொப்பிசை, திரை இசை, இறை இசை அனைத்துத் துறைகளிலும் ஆறு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே பங்களிப்புகளை வழங்கிவந்த கனகாம்பாள் சதாசிவம் . இவரது இயற்பெயர் உமாதேவி. இசைத்துறையில் ஈர்ப்பு ஏற்பட கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் மீது கொண்ட பேரபிமானமே காரணமாயிருந்தமையால் தனது பெயரையும் அந்தப் பெயரின் சாயலிலேயே கனகாம்பாள் என மாற்றி வைத்துக் கொண்டாராம்.
1976ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படமான ‘கோமாளிகள்’ திரைப்படத்தில் கண்ணன்-நேசம் இரட்டையர் இசையில் ‘ஏ மாமா நீ ஒரு கோமாளிதான்’ பாடலையும், 1978ம் ஆண்டு வெளிவந்த ‘நான் உங்கள் தோழன்’ திரைப்படத்தில் M.K.றொக்சாமியின் இசையில் ‘மே தினம் மேதினம்’ பாடலையும் பாடினார். .
“கனகாம்பாள் சதாசிவம் (1939-05-02) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்வமணி; தாய் அம்மைமுத்து.
1947ஆம் ஆண்டில் இசையுலகில் தடம் பதித்த இவர் கண்ணன் கோஷ்ரியின் பிரதான பாடகி.
தனியாகவும் பக்திப்பாடல் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.
கே.பி.சுந்தராம்பாளின் பாடல்களை அவர் சாயலிலேயே பாடும் திறமையைக் கொண்டிருந்தார்.
ஞானப் பழத்தைப் பிழிந்து என்ற பாடலை அவரது மானசீக குருவான சுந்தராம்பாள் முன்னிலையிலேயே பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.
அவரது பூவுடல் நாளை(28-01-26) புதன் கிழமை பி.பகல் 4 மணியளவில் வவுனியா, வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.


