பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் சுமார் ரூ.240 மில்லியன் மதிப்புள்ள கிட்டத்தட்ட 5 கிலோகிராம் கோகோயினை கடத்த முயன்றபோது பிறேஸில் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்
சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் கொண்டு வந்த கோகோயின் 4 கிலோகிராம் 855 கிராம் எடையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கோகோயினை அட்டைப் பெட்டியில் ஒட்டி, கறுப்பு காகிதத்தால் மூடி, ஏழு சிறிய பைகளில் (ஒவ்வொன்றிலும் இரண்டு அட்டைகள்) பேக் செய்து, பின்னர் ஒரு சூட்கேஸில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (BIA), கைப்பற்றப்பட்ட கோகைன் பொதியையும் சந்தேகத்திற்குரிய பயணியையும் மேலதிக விசாரணைக்காக BIA இல் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.