புறக்கோட்டையில் உள்ள கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகின.
1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டதிலிருந்து இந்த வசதியில் செய்யப்படும் முதல் பெரிய மேம்படுத்தல் இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’சுத்தமான இலங்கை’ தேசிய திட்டத்தின் கீழ், புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம், 425 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை விமானப்படையின் நேரடி தொழிலாளர் பங்களிப்பு,, கொழும்பு நகராட்சி மன்றம், இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், சாலை மேம்பாட்டு ஆணையம், நகர மேம்பாட்டு ஆணையம் ஆகியன இத்திட்டக்குக்கு அத்துழைப்பு வழங்கிகின்றன.