கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொள்கலன் கப்பல் ஒன்று முனையத்திற்கு வரவுள்ளதாக பிரதியமைச்சர் ருவான் கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.மேற்கு முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.7 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும்.இதேவேளை, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையின் நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது, இது ஆண்டுக்கு 3 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறன் கொண்டது.