புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்திய சர்வதேச சகோதரிகள் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை [3] கொழும்பில் மிகச் சிறப்பாக நடை பெற்றது .
அமைப்பின் தலைவி ரஞ்சனி சுரேஷ் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். அமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா சிறார் காப்பகங்களுக்கான உடை , அத்தியாவசிய அவசிய பொருள்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தார். மட்டக்குளியிலுள்ள மெளசேவன சிறுவர் இல்லம் ,வத்தளை கோகுலம் சிறுவர் நிலையம் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டன.
பிரதம நிர்வாகத்தின் தலைவர் ஷண்மு , மகளிர் அணி செயலாளர் பிரியதர்ஷினி பாடசாலைகளுக்கான
நூல்கள் வழங்கினார் இவை இரத்தினபுரி நிரியெல்லை தமிழ் வித்தியாலயம் , பசறை சைவ பிரகாசம் தமிழ் வித்தியாலயம் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டன.
திருமதி ஆனந்தி குறும்படக்கதை சொல்லும் நிகழ்வில் பங்கேற்று கதை சொன்னார். கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெற்றன.நிகழ்ச்சியை மகளிர் அணியின் பொருளா ளர் உஷா கெனடி தொகுத்து வழங்கினார்.
