Sunday, January 25, 2026 4:06 pm
இந்திய கடலோர காவல்படை கப்பல்களான வராஹா , அதுல்யா ஆகியவை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தபோது கடற்படை மரபுகளின்படி வரவேற்கப்பட்டன.
96.2 மீற்றர் நீளம் கொண்ட ஆஃப்ஷோர் ரோந்து கப்பல் (OPV) இந்திய கடலோர காவல்படை கப்பல் (ICGS) வராஹா, கமாண்டன்ட் அஸ்வினி குமார் தலைமையில் செயல்படுகிறது, அதே நேரத்தில் 50 மீற்றர் நீளம் கொண்ட விரைவு ரோந்து கப்பல் ICGS அதுல்யா, கமாண்டன்ட் அனித் குமார் மிஸ்ரா தலைமையில் செயல்படுகிறது.
இஅவை இரண்டும் இலங்கை கடலோர காவல்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருகை இந்திய , இலங்கை ஆகிய நாடுகளின் கடலோர காவல்படையினருக்கு இடையேயான தொழில்முறை தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

