கொழும்பு நகரம், கோட்டை, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் சிக்குன்குனியா பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி நிலவரப்படி, வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையின்படி, கொழும்பு, கம்பஹா , கண்டி ஆகிய இடங்களில் இருந்து 173 சிக்குன்குனியா நொயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 1960 ஆம் ஆண்டு சிக்குன்குனியா வைரஸ் இலங்கைக்கு பரவியதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர், ஆலோசகர் டாக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை மருத்துவரான டாக்டர் தீபால் பெரேரா கூறுகையில், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.”இந்த சூழ்நிலையைச் சமாளிக்க, உங்கள் வீடுகள், கதவுகள் ,ம் பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்,” என்று கூறினார்.
Trending
- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பரிசுத் தொகை அறிவிப்பு
- ஐபிஎல் இல் தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி
- நீரஜ் சோப்ராவுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
- இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – இந்திய சட்டத்தரணி சிவஞானசம்பந்தம்
- இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
- கடலில் மூழ்கப்போகிறது மன்னார் வளைகுடாவில் உள்ள கரியாச்சல்லி தீவு
- விசாரணைக் குழு முன் ஆஜராகிறார் தேசபந்து தென்னகோன்
- 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை புதுப்பிக்க திட்டம்