தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜேவிபியே கற்றுக் கொடுத்தது என கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர்.
எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது.
தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
Trending
- முதன்முறையாக பெண்கள் குழு விண்வெளிக்கு பயணம்
- நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்
- JVP க்கு தமிழ் மக்கள் வாக்களிக்ககூடாது – நா.வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு
- யாழில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
- தலதா மாளிகையில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு
- நாளை சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள்
- வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் கைது