டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுகளை மீறுமாறு அமெரிக்க துருப்புக்களை வலியுறுத்திய கொலம்பிய ஜனாதிபதியின் விஸாவை இரத்து செய்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் ஐ.நா.விற்கு வெளியே நடந்த பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஸ்டாவோ பெட்ரோ, பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு உலகளாவிய ஆயுதப் படைக்கு அழைப்பு விடுத்தார்.
பிங்க் ஃபிலாய்டின் ரோஜர் வாட்டர்ஸுடன் பேரணியில் கலந்துகொண்ட பெட்ரோ, “படை அமெரிக்காவை விட பெரியதாக இருக்க வேண்டும்” என்று ஸ்பானிஷ் மொழியில், கூறினார்.
“அமெரிக்க இராணுவத்தின் அனைத்து வீரர்களும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்ட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ட்ரம்பின் கட்டளைகளை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.
“பெட்ரோவின் பொறுப்பற்ற செயல் காரணமாக அவரது விஸாவை இரத்து செய்யப்படும் ” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை X பதிவில், கூறியது.