மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, நிதி நெருக்கடியால் வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இலவச கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆண்டாள் அழகர் கல்லூரி நிதி நெருக்கடி காரணமாக கை மாறி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக ஆண்டாள் அழகர் கல்லூரியை நிர்வகிப்பதில் விஜயகாந்த் குடும்பத்தினர் பெரும் சிரமத்தை சந்தித்து வந்துள்ளது. இதனால், தனலெட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் ஆண்டாள் அழகர் கல்லூரியை சுமார் 150 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கல்லூரி கட்டியதில் இருந்தே அரசு என்ன கட்டணத்தை நிர்ணயித்துள்ளதோ, அதே கட்டணத்தை மட்டும் தான் விஜயகாந்த் அவர்கள் அந்த கல்லூரியில் வசூலித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல், பலரை இலவசமாக படிக்க வைத்திருக்கிறார். பலருக்கு அவரே கல்லூரி கட்டணத்தையும் செலுத்தி இருக்கிறார். இதனால், இந்த கல்லூரியில் இருந்து எந்த லாபமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.