மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்,கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் , விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கைதி படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் லோகேஷும் திட்டமிட்டுள்ளதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் கைதி காட்சிகள் இடம்பெற்றது போல இப்பொது கைதி 2 வில் விக்ரம் சம்மந்தமானக் காட்சிகளும் இடம்பெற உள்ளதாம். அதனால் கமல்ஹாசனை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை