முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களைச் செய்வதன் மூலம் அரசாங்க சம்பளம் ,கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ரம்புக்வெல்ல மீது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.