2025 உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குஎ சென்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல் அஹ்மத் அல் சபாவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதிலும், சந்தைகளை பன்முகப்படுத்துவதிலும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர். பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய மூலோபாய முயற்சிகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தையும் இருவரும் விவாதித்தனர்.
குவைத்தில் சுமார் 1,55,000 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும், அவர்கள் ஆண்டுதோறும் 700 மில்லியன் அமெரிக்க டொலரை அனுப்புவதாகவும், இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாகவும் ஜனாதிபதிதெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.