தகுதியற்ற மருந்தக உதவியாளர்களை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குருநாகல் போதனா மருத்துவமனையில் இன்று (13) காலை 8:00 மணி முதல் அரசு மருந்தாளுநர்கள் சங்கம் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் செய்கிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்ததை அதிகாரிகள் புறக்கணித்ததாகவும், தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் ஏற்கனவே மருத்துவமனையில் பணியாற்றி வந்த போதிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.