இஸ்ரேலுடனான 12 நாள் போரின் விளைவுகளைப் பயன்படுத்தி ஈரானிய அரசாங்கம் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக, குறிப்பாக அரசியல் , சிவில் ஆர்வலர்களுக்கு எதிராக அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது என்று ஈரானின் மிக முக்கியமான மனித உரிமை ஆதரவாளர்களில் ஒருவரான
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி, ஏபிசி செய்திக்கு அனுப்பிய காணொளி செய்தியில் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து மரணதண்டனைகள், பரவலான கைதுகளின் அதிகரிப்பு, பல தசாப்தங்களாக கூறப்படும் அடக்குமுறை, தோல்வியுற்ற கொள்கையிலிருந்து விலகிச் செல்ல, “பயத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பும்” நோக்கத்துடன், ஆட்சி இந்த தருணத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது என்று எச்சரித்தார்.
“இஸ்லாமிய குடியரசுக்கும் ஈரான் மக்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைவதை நாம் இப்போது காண்கிறோம் – இது 46 ஆண்டுகளாக நடந்து வரும் போர்” என்று முகமதி கூறினார்.
விரைவான மரணதண்டனைகள் ,கைதுகளுடன் ஈரானில் ஒடுக்குமுறை தீவிரமடைகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான “வெற்றி” என்று ஈரானிய அதிகாரிகள் பகிரங்கமாகக் கொண்டாடியிருந்தாலும், முகமதி அந்தக் கூற்றை நிராகரிக்கிறார்.
அவசர, உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஈரானின் மோசமான எவின் சிறைக்குத் திரும்புவதற்கான அரசாங்க உத்தரவை மீறி, தெஹ்ரானில் உள்ள தனது வீட்டிலிருந்து முகமதி பேசினார். 13 ஆண்டுகள், 9 மாத சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முகமதிக்கு, நாட்டின் பல அதிருப்தியாளர்கள் , அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து மருத்துவ விடுமுறை வழங்கப்பட்டது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்