Monday, April 6, 2026 9:25 am
ஐபிஎல் 2026 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி பந்து வரை நீடித்த இந்த ஆட்டத்தில், 211 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணாஆஅயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் வென்ற ராஜஸ்தான் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (55) ,15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (31) ஜோடி 70 ஓட்டங்கள் சேர்த்து அதிரடித் தொடக்கம் அளித்தது. துருவ் ஜுரெல் தனது அதிரடியான ஆட்டத்தால் 42 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தது.
தசைப்பிடிப்பு காரணமாக கப்டன் ஷுப்மன் கில் இந்தப் போட்டியில் விளையாடாதது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் கப்டனாகஅணியை வழிநடத்தினார்.
211 என்ற கடினமான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன்[ 73], ஜோஸ் பட்லர்[ 26,] ராகுல் திவேட்டியா [12 ]ஆகியோரின் விக்கெட்டுகளை ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினார்.
பரபரப்பான கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய அந்த ஓவரில் குஜராத் வீரர்களால் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

