Saturday, February 1, 2025 7:05 am
நகுலேஸ்வரம் அமைந்திருக்கும் வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தீன் சைவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கீரிமலையில் உள்ள ஜானாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் விசேட பயன்பாட்டிற்கு வழங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர திசநாயக்கா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக் கழக இந்துக்கற்கைகள் பீடத்திற்கு அதனை கோர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

