கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 11 பேர் காயமடைந்தர்.
இந்த வெள்ளம் மாகாணத்தின் தலைநகரான மெஹ்தர்லாம் நகரம் , பல மாவட்டங்களை பாதித்தது, குறைந்தது 80 குடியிருப்பு வீடுகளை அழித்தது மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. சுமார் 525 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின, அதே நேரத்தில் 160 கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன.
கூடுதலாக, வெள்ளம் மாகாணத்தில் 25 கி.மீ கிராமப்புற சாலைகளையும் 700 மீற்றர் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்களையும் அடித்துச் சென்றது.
ஆப்கானிஸ்தானின் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று புதிய எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு நிலையம் விடுத்துள்ளது.