அனுர அரசு அறிமுகப்படுத்திய கிளீன்ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் [ 565 மில்லியன் ரூபா] மானியத்தை வழங்கியுள்ளது.
இந்த மானியத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று திங்கட்கிழமை (03) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஜப்பானின் வெளியுறவுத்துறை பாராளுமன்ற துணை அமைச்சர் திருமதி சயாமா (இகுயினா) அகிகோ , நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த மானியம் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு மேலாண்மை திறனை மேம்படுத்துவதற்காக 28 குப்பை அமுக்கிகளை வாங்குவதற்கு நிதியளிப்பதன் மூலம் பயன்படுத்தப்படும், இது நாட்டின் கழிவு அகற்றும் திறனை மேம்படுத்துகிறது.