சர்வதேச அளவில் இசைத் துறையில் மிகப்பெரிய கெளரவரமாக கருதப்படுவது கிராமி விருது. பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. 67வது கிராமி விருது விழா ,கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விழாவாக லொஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, ‘திரிவேணி’ இசை அல்பம், ‘சிறந்த தற்கால ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது.
- சென்னையில் சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் பிறந்தார். இவருக்கு வயது 71
- இவர் பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார்.
- பட்டப் படிப்பிற்கு பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து தொழில்துறையில் சிறந்து விளங்கினார். சந்திரிகா தெரிவித்துள்ளார்.