காஸாவில் கடந்த புதன்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் காஸா பகுதியில் உணவு லொறி கவிழ்ந்ததில் 20 பேர் இறந்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.
காஸா பகுதியில் உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த கூடாரத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக காஸாவில் உள்ள சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.