இலங்கைத்தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வானிலை நிலமை சார்ந்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
