Saturday, November 8, 2025 12:21 pm
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டின் மூன்றாவது நாளில் கையில் காயம் ஏற்பட்டதால் இந்தியா ஏ அணி கப்டன் ரிஷப் பந்த் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்தியா நான்கு விக்கெற்களை இழந்து 108 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது,ரிஷப் ப் அந்த்மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலையில் அவருக்கு இரண்டு முறை காயம் ஏற்பட்டது.
அவர் வெளியேறுவதற்கு முன்பு இரண்டு மருத்துவ இடைவேளைகள் இருந்தன, அவருக்குப் பதிலாக துருவ் ஜூரெல் சேர்க்கப்பட்டார்.
ஜூலை மாதம் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் போது ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மூன்று மாத ஓய்வுக்குப்பினர் மைதானத்துக்குத் திரும்பினார்.
கடந்த வாரம் நடந்த முதல் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் 113 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்து அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை பிசிசிஐ அறிவித்தது.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் 18 வரை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் நடைபெறும், அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் 26 வரை குவஹாத்தியில் நடைபெறும்.

