காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதார. ஆண்டுதோறும் 12,000 பேர் காயங்களால் உயிரிழக்கின்றனர் எனவும் சுகாதார அமைச்செ தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெலியிட்ட அறிகையில் ,
15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களே காயங்களால் பெரும்பாலும் உயிரிழக்கின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாறான காயங்கள் பெரும்பாலும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள், சரியாக செயற்படுவதன் மூலம் தவிர்க்கக்கூடியவை. காயங்கள் ஏற்பட்டதும் உடனடியாக அடிப்படை முதலுதவி அளிப்பது மனித உயிர்களை காப்பாற்றுவதிலும் சிக்கல்களை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகத் துறையினரும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும். விபத்துகளின் மூலக் காரணங்களைப் பற்றியும், முதலுதவியின் அவசியத்தை பற்றியும் மக்களிடையே எடுத்துரைப்பது பாதுகாப்பான சமுதாயத்திற்கான கட்டமைப்பை உருவாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.