காதலர் தினத்தில் பிக் பாஸ் ஜாக்குலின் தனது காதலரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து, Instagram பக்கத்தில் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜாக்குலின். இவர் 100 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்த நிலையில், இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணப்பெட்டியை எடுக்கும் ஆசையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வராததால், அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், சில தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஜாக்குலின் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, தனது காதலரை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரபல புகைப்படக் கலைஞர் யுவராஜ் செல்வநம்பி தான் தனது காதலர் என்று கூறி, லவ் எமோஜியை பதிவு செய்துள்ளார்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.