இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 4 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்தோடு, இவர்கள் இந்தியாவின் மினிகோய் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 4 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்குப் பிறகு, மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Trending
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்