அமெரிக்க மாநிலத்தில் குடியேறிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தொகுப்பில் கையெழுத்திட்டதாக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் சனிக்கிழமை அறிவித்தார், ரகசிய பொலிஸ் இல்லாத சட்டம் என்பது நாட்டில் முதன்முறையாக அதிகாரிகள் முகமூடி அணிவதைத் தடை செய்யும் நடவடிக்கையாகும்.
லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் பேசிய நியூசம், ஐந்து மசோதாக்களில் கையெழுத்திட்டு சட்டமாக மாற்றியதாகக் கூறினார். ரகசிய பொலிஸ் இல்லை சட்டம், கூட்டாட்சி,உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது முகமூடி அணிவதை பரவலாகத் தடை செய்கிறது.
மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க அதிகாரிகள் பணியில் இருக்கும்போது, ரகசியமாகப் பணியாற்றாவிட்டால், தங்கள் பேட்ஜ் எண்கள் அல்லது பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் தங்களை அடையாளம் காண வேண்டும் என்று கோரும் மசோதாவிலும் நியூசம் கையெழுத்திட்டார்.