Friday, April 11, 2025 10:54 am
‘பனி விழும் மலர் வனம்’ , ‘கயல்’ ‘கெட்டி மேளம்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன். சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்தார். நேறறு சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுத் தூங்கச் சென்றவர் சிறிது நேரத்திலேயே நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். குடும்பத்தினர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களில் நடித்து வரும் பிரபாகரன் ராடானின் ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வந்தார். சன், விஜய், ஜீ தமிழ் என அத்தனை முன்னணி சேனல்களிலும் பெரும்பாலும் அப்பா கேரக்டர்களில் நடித்து வந்தார்.
கடந்த சில மாசமாகவே அவருக்கு உடல் பிரச்னை இருந்தது..மூளையில் பிரச்சனை என்று சிகிச்சை எடுத்திருந்தார். இந்த நிலையிலதான் தீடீர்னு நெஞ்சுவலியும் வந்து உயிர் பிரிந்தது.பிரபாகரனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் பத்தாவது படித்து வருகிறாராம்.
பிரபாகரனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

