Friday, February 20, 2026 5:14 pm
கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ சனிக்கிழமை நண்பகல் 12:07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களின் இதயங்கள் இறக்கைகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன.
ரஜினி பிறந்த 12-ஆம் திகதியையும், கமல் பிறந்த 7ஆம் திகதியையும் சென்டிமென்டாகச் சேர்த்திருக்கின்றனர். ஒரு நிமிடத்துக்குள் ஓடும் ப்ரமோவில் முதலில் நெல்சனும் அனிருத்தும் பேசுகிறார்கள். அடுத்து ரஜினியின் டயலாக், அதன்பிறகு வாய்ஸ் ஓவரில் கமல் வருகிறார்.
கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

