சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.
முதல்படமாக சிம்பு- ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் சிம்பு கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. போஸ்டரில் கூட அவர் ஆக்ரோஷமான ஒருவராகதான் சித்தரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்
- நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் விஷால்
- சீன இலங்கை ஊடக உறவுகள் அதிகரிக்கப்படும்
- பிங்கிரியாவில்இலங்கையின் முதல் தேனீ பூங்கா
- சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது குழந்தை
- ட்ரம்ப் புட்டின் பேச்சுவார்த்தை முடிகிறது சண்டை?