Thursday, January 22, 2026 8:58 pm
தமிழகத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவைகளுக்கு நிலையான சின்னம் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், புதிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தவெகவுக்கு அவர்கள் கேட்டது போலவே விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ரோர்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஒதுக்கப்பட்ட சின்னங்களின் விபரம் வெளியாகி உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி- பானை சின்னம் நாம் தமிழர் – விவசாயி சின்னம் அமமுக- குக்கர் சின்னம் தவெக – விசில் சின்னம் ,மக்கள் நீதி மய்யம் டோர்ச் லைட் இதில் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தலில் குறைந்தபட்சம் 5 சதவீத சட்டசபை தொகுதிகளில் தவெக, மநீம போட்டியிட வேண்டும். அது போல் தவெக போட்டியிடாத இடங்களில் அக்கட்சியின் விசில் சின்னம் சுயேச்சைகளுக்கு அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேமுதிகவுக்கு முரசு சின்னம் உள்ளது. பாமகவுக்கு மாம்பழச் சின்னம் இருந்தது. ஆனால் தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனினும் கட்சியும் சின்னமும் தன்னிடம் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். ஆனால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என ராமதாஸ் அணியும் தெரிவித்து வருகிறது. இதனால் மாம்பழம் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது

