‛ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவராக திமுகவின் கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்று ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பற்றி எடுத்துரைத்து பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்க உள்ளனர்.