கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பாதிக்கப்படலாம்.
கனடா அரசு மாற்றிய விஸா விதிமுறைகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் படிப்பு ,பணி அனுமதிகளை இரத்து செய்ய அதிகாரிகளுக்கு இப்போது அதிக அதிகாரம் தரப்பட்டுள்ளது.
புதிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகள் ஜனவரி 31 ஆம் திகதி அமுலுக்கு வந்தது.
ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும்போது, வேலை செய்து கொண்டிருக்கும்போது அல்லது கனடாவில் வசிக்கும் போது அனுமதி இரத்து செய்யப்பட்டால், குறிப்பிட்ட திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும்.