Tuesday, February 18, 2025 10:10 am
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினனால் நடத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் திக்கம் கலாசார மத்திய நிலையத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் தலமையில் இடம் பெற்றது.
பயிற்சி பெற்ற மாணவிகளின் ஆடைகள், கேக் வகைகள், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் செல்வி தர்சினி உருத்திர கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரிமதி சுனேத்ரா சுதாகர், கௌரவ விருந்தினர்களாக ஓய்வு பெற்ற தையல் போதனாசிரியர் திருமதி இன்பராணி வரதராசா, அல்வாய் மேற்கு கிராம சேவகர் பாலலோஜினி ரவிச்சந்திரன், திக்கம் மத்திய சனசமூக நிலைய தலைவர் கந்தசாமி சிவசோதி, மனைப்பொருளியல் கல்வியை நிறைவு செய்த மாணவிகள்,பெற்றோர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


