கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற அறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 20 பேரிடம் எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.
இதுவரை பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உட்பட 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது கடமையில் இருந்த மஜிஸ்திரேட்டும் வாக்குமூலத்தை வழங்குவார்.இதேவேளை, மேலும் மூன்று சந்தேகநபர்கள் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மொத்த கைதுகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.