மூத்த கடற்படை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் இன்றைய பாதுகாப்பு நிலைமை எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
கடல் வழிகள் வழியாக ஆயுதங்கள் , போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகள் , ஆழ்கடல் நீரில் கண்காணிப்பு பணிகள் உட்பட தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் கடல்சார் நடவடிக்கைகள் பற்றிய விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட மற்றும் பல மூத்த கடற்படை அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.