மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலியின் கார் விபத்தில் சிக்கியது.
தண்டன்பூரில் நடந்த இந்த சம்பவம், கங்குலியின் வாகன கான்வாயை ஒரு லாரி திடீரென முந்திச் சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனால், கங்குலியின் வாகனத்தின் பின்னால் இருந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, அவற்றில் ஒன்று கங்குலியின் காரை மோதியது.அதிர்ஷ்டவசமாக, விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் பாதுகாப்புக்காகச் சென்ற இரண்டு கார்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.
விபத்தினால், சௌரவ் கங்குலி பர்த்வான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் மாற்று ஏற்பட்டவுடன், அங்கு அவர் விழாவில் கலந்து கொண்டார்.
Trending
- தெற்கு , மேற்குஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
- பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினா தாமஸ் முல்லர்
- திடீர் மாரடைப்பால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்
- புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்த மோடி வேண்டுகோள்
- சஜித் கொடுத்த சிறுத்தையின் கதை
- தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
- மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய வீழ்ச்சி
- அரசு நிறுவனங்களுக்கு முறையான கழிவு மேலாண்மை திட்டம்