இந்திய-அமெரிக்க கோடீஸ்வரரும், முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பந்தயத்தில் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கியுள்ளார்.
டொனால்ட் டர்ம்பின் அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) விட்டு விலகுவதாக அவர் கடந்த மாதம் கூறியிருந்தார்.
ஆளுநர் தேர்தலில் போட்டியிட இருப்பதால் தன்னால் இப்பதவியை வகிக்க முடியாது என அப்போதே அவர் கூறினார்.
சின்சினாட்டியில் நடந்த ஒரு பேரணியில் விவேக் ராமசாமி தனது முறையான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அங்கு அவர் தடைகளை அகற்றி வணிகங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் ஒரு தொலைநோக்கு பார்வையை பற்றி விரிவாக உரைத்தார்.