Wednesday, January 14, 2026 8:39 am
சர்வதேச ஹொக்கியில் இருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் இந்திய ஃபார்வர்ட் வந்தனா கட்டாரியா, இப்போது தேசிய அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வமாக உள்ளார்.
“எனக்கு அழைப்பு வந்தால், ஆம் (நான் இருப்பேன்). உண்மையில், ஹொக்கி இந்தியா லீக்கின் (HIL) போது காணப்பட்டது போல், நான் சரியான உடல் தகுதியுடன் இருக்கிறேன். இந்திய அணிக்கு நான் ஒரு வீரராகத் தேவைப்பட்டால், நான் தயாராக இருக்கிறேன்,” என்று சனிக்கிழமை HIL இல் தனது அணியான ஷ்ராச்சி பெங்கால் டைகர்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிறகு ஸ்போர்ட்ஸ்டாரிடம் அவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டு சீனியர் அணியில் அறிமுகமான வந்தனா, கடந்த ஆண்டு இந்திய மகளிர் ஹொக்கி வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையாக விளையாட்டை விட்டு வெளியேறினார். அவர் 320 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 158 கோல்களை அடித்துள்ளார்.
“சில விஷயங்கள் எனக்கு சாதகமாக நடக்காததால் விரக்தியடைந்த பிறகு ஓய்வு பெறும் முடிவை நான் எடுத்தேன். சில நேரங்களில், ஒரு வீரர் ஏதாவது செய்யத் தள்ளப்படுகிறார். நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன்,” என்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வந்தனா கூறினார்.
பெப்ரவரி 2025 இல் புவனேஸ்வரில் நடந்த எஃப்ஐஎச் புரோ லீக்கின் போது வந்தனா இந்தியாவுக்காக தனது கடைசிப் போட்டியில் விளையாடினார்.

