அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் வரிகளை விதித்தால், அதன் மதுபானங்களுக்கு 200 வீத வரி விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் “அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக” உருவாக்கப்பட்டது என்றும், “மிக விரைவில்” தனது அதிகரித்து வரும் வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்தார்.
புதன்கிழமை அமலுக்கு வந்த அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட வரிகளை அமெரிக்கா மீது மீண்டும் விதிப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்ததற்கு ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.