இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை வெளியுறவு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் போலந்து தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்துடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதையும், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை ஆராய்வதையும் இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- பரராஜ சேகரப் பிள்ளையார் தேர்
- யாழ்ப்பாண அபிவிருத்தி கலந்துரையாடல்
- பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
- முல்லைத்தீவு மாவட்டத்தில் சந்திரன் நகர் மாதிரி கிராமம் திறப்பு விழா
- நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்
- மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைத்தண்டனை
- நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு
- பனிப்பாறையால் புதைந்த கிராமம்